Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்

Home » Spiritual Diaries » ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்

ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்
1. ஆநந்தரூபே நிஜபோதரூபே
ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே
சசாங்கரூபே ரமணீயரூபே
ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மநோ மே.

பொருள்: ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின்(வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும்,அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சிசெய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.

2. காவேரிதீரேகருணா விலோலே
மந்தாரமூலே த்ருதசார கேலே
தைத்யாந்த காலே அகிலலோகலீலே
ஸ்ரீரங்கலீலே ரவதாம் மநோமே.

பொருள்: காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன்அருள்புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும்தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும்அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகிலஉலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகியஸ்ரீரங்கனுடைய லீலைகளின் பால் என் மனம் ஈடுபடுகின்றது.

3. லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே
ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே
க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே
ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மநோமே.

பொருள்: லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும்(திருமாலில் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள்மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின்தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில்ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும்,காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலேவசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம்வசப்படுகிறது.

4. ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே
முகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே
வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே
ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மநோமே.

பொருள்: பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும்,உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும்,முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால்நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதிமுனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில்வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.

5. ப்ரஹ்மாதிராஜே கருடாதி ராஜே
வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே
த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே
ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மநோமே.

பொருள்: பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும்,வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்றுஉலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும்அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என்மனம் நாட்டமுடையதாகிறது.

6. அமோக முத்ரே பரிபூர்ண நித்ரே
ஸ்ரீ யோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே
ச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே
ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மநோமே.

பொருள்: உயர்வான அபய முத்திரையை உடையவரும்,முழுமையான நித்திரையையுடையவரும், யோக நித்திரையில்ஆழ்ந்தவரும் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும்,அடைக்கலமடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்துஅருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரேஒருவருமான ஸ்ரீரங்க வாசரின் பால் என் மனம் எப்போதும்ஈர்க்கப்படுகிறது.

7. ஸசித்ர சாயீ புஜகேந்த்ர சாயீ
நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ
க்ஷீராப்திசாயீ வடபத்ரசாயீ
ஸ்ரீரங்கசாமீ ரமதாம் மநோமே.

பொருள்: ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும்,ஆதிசேஷன் மேல் பள்ளிக் கொண்டிருப்பவரும், நந்தன் மடியில்படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப்படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகியரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.

8. இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புநர் நாசங்கம் யதி சாங்க மேதி
பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்
யாநே விஹங்கம் சயனே புஜங்கம்

பொருள்: இது வல்லவா ஸ்ரீரங்கம்! இத்தலத்தில் மரணிப்பவர்கள்மறு பிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம்பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில்கங்கா ஜலம், பயணிக்கும் போது கருடன், சயனத்தில் சர்ப்பம்என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர். (பகவான் தன்னோடு அவர்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால்அவர்களும் அவரது வடிவையே பெறுவர் என்பது உட்பொருள்.)

9. ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய: படேத்
ஸர்வாந் காமா நவாப்நோதி ரங்கி ஸாயுஜ்ய மாப்நுயாத்.

பொருள்: எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும்காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லாஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும்அவர் பெறுவார் என்பது நிச்சயம்!

ஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி.
ஸப்தப்ராகார மத்யே ஸரஸி ஜ முகுலோத் பாஸமாநே விமாநே
காவேரீ மத்யதேசே பணிபதிஸயநே சேஷபர்யங்க பாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிச்டஸிர: பார்கவ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்

422 total views, 1 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai