Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

வாத்தியார்-திருவிளையாடல்கள் – 1

Home » Spiritual Diaries » வாத்தியார்-திருவிளையாடல்கள் – 1

ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம்

பெரிய வாத்தியார் (ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர்), வாத்தியார் (ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்தர்) திருவிளையாடல்கள் – 1

சிறுவனுக்கு (வாத்தியாருக்கு) ஆவல் பிறந்து விட்டது. “வாத்யாரே. கடவுளப் பாக்கறதுன்னா என்னா? அது எப்டீ இருக்கும்?”

“கடவுள் காட்சிங்கறது யாராலயுமே வார்த்தையால சொல்ல முடியாத ஒரு அனுபவம்டா. அனுபவிச்சவங்களாலத்தான் அத முழுசா உணர முடியும். எவ்ளோதான் சொன்னாலும் புரியாதுடா.”

“கொஞ்சம் புரியற மாதிரித்தான் சொல்லேன்.” சிறுவன் கெஞ்சினான்.

“கோடிக்கணக்கான ஜீவனுங்கள்ல சாமியப் பாக்கறதுக்காக வாசல் வரைக்கும் போற தகுதி பத்து பேருக்குத்தான் கெடைக்குது. அந்தப் பத்து பேர்லயும் வாசலத் தாண்டி உள்ள போறவனுங்க அஞ்சே அஞ்சு பேருதான். அந்த அஞ்சு பேர்லயும் அதுக்கப்பறம் உள்ள போறவனுங்க ரெண்டு பேருதான். அந்த ரெண்டுலயும் ஒருத்தருதான் கருவறைக்குள்ளாற போறாரு.”

“மத்தவங்க ஏன் உள்ளாற போவல. வாத்யாரே?”

“அவங்களுக்கு அதுவரைக்கும் போகத்தாண்டா தகுதியே. போதாதா? அந்த நெலம வர்றதுக்கே என்னா பாடுபடணும்?”

“சரி வாத்யாரே. கடைசியா ஒருத்தரு உள்ளாற போனாரே. அவரு என்னா ஆனாரு? அவராச்சும் கடவுளப் பாத்தாரா?” சிறுவன் கேள்விக்கு மேல் கேள்விகளாக அடுக்கினான்.
“யாருக்குடா தெரியும்? உள்ளாறப் போன ஆளுதான் வெளியவே வரலயே. ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதுனாலத்தான் “சாமி அறிவாரடி. அதை சாமி அறிவாரடி”ன்னு பாடி வச்சாங்க பெரியவங்க.”

“ஒண்ணுமே புரியலயே. வாத்யாரே. எனக்குப் புரியற மாதிரி ஏதாச்சும் சொல்லேன்.” சிறுவன் கெஞ்சினான்.

“சரிடா. கேட்டுக்க. நாம சுத்தி வர்றமே. இந்த அண்ணாமலையாரு அடிமுடி காண முடியாத ஜோதிப் பிழம்பா … அப்றம் தங்க மலையா, மரகத மலையா எல்லாம் காட்சி தந்தவரு. என்னைக்கு அதெல்லாம் தானாவே ஒனக்குத் தெரியுதோ, அன்னைக்குக் கடவுளப் பாக்கற தகுதி வந்துடுச்சுன்னு புரிஞ்சுக்க. ஏன், கடவுளப் பாத்ததாவே வச்சுக்கலாம்.”

“வாத்யாரே, எப்ப எனக்கு அந்த நெலம வரும்?”

“அதுவா? என்னைக்குக் கல்லு, மண்ணு, தங்கம், வைரம், நல்லது, கெட்டது எல்லாத்தையும் ஒண்ணாப் பாக்கற மன நிலை வருதோ, அன்னைக்குத் தானாவே வரும்.” என்றார் பெரியவர்

ஓஃம்

394 total views, 2 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai