Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

லாவண்ய கெளரீ விரத சக்திகள் 11.5.16

Home » Happiness » லாவண்ய கெளரீ விரத சக்திகள் 11.5.16

லாவண்ய கெளரீ விரத சக்திகள்

11.5.2016ல்
✅வளர்பிறைச் சக்திகளுடன்,
✅பஞ்சமி,
✅புனர்பூசம்,
✅சித்த யோகம் எனப்
✅பலவிதமான சிறப்பம்சங்களும் கூடிய “லாவண்ய கௌரீ விரத சக்திகளும்” பரிமளிக்கும் நன்னாள்.

“லாவண்ய கௌரீ விரத” நாளில்
☄“விளக்குத் தீபத்தில்” அம்பிகையை சர்வ தீபாலங்கார லாவண்யங்களுடன் தரிசித்தலே “தெய்வ லாவண்யம்” ஆகும்.

அதாவது மின்ஒளி கூட இல்லாது விளக்கொளியில் தெய்வ மூர்த்திகளைத் தரிசித்திட வேண்டும்.

மிகவும் எளிமையான பருத்தி ஆடைகள், கண்ணாடி வளையல்கள் போன்றவை மட்டும் அணிந்து,

மஞ்சள், குங்குமம், கண் மை, சாந்து, திருநீறு, சந்தனம் போன்றவற்றுடன் எளிமையாகத் துலங்கி,

இயன்ற வரை நடந்தே ஆலயத்திற்குச் செல்தல் என்றவாறாக எளிமை “பூண்டு”, உண்ணா விரதமிருத்தல் சிறப்புடையது.

குறைந்தது 6 ஆறு மணி நேரம் தொடர்ந்து விளக்கொளியில் அம்பிகையைப் பூஜித்தவாறே தரிசித்தல்,

நிறையப் பூக்களைத் தாமே தொடுத்து அம்பிகைக்குச் சார்த்துதல்,

இல்லத்திலும், ஆலயத்திலும் அம்பிகைக்குப்
☄பட்டு வஸ்திரங்கள், ஆபரணங்கள் சார்த்தி,
☄பலவகைத் திரிகள், பல்வகை விளக்குகள், பல்வகைத் தைலங்களுடன் நிறைய விளக்குகளை ஏற்றி,
☄“லாவண்ய கௌரீ” அம்பிகையாய் உருவகித்து வழிபடுதல் வேண்டும்.

“கௌரீ” அல்லது “சுக்கிர வார அம்மன்” என்ற பெயரில் அருளும் அம்பிகையை விரதமிருந்து தரிசித்தல் விசேஷமானதாகும்.

லாவண்ய கௌரீ விரத மகத்துவத்தால்,
☄“தான் அழகாகப் பிறக்கவில்லையே!” என்ற ஏக்கங்கள் ஓரளவேனும் மனப்பூர்வமாகக் காரணங்களை அறிந்து தீர்வு பெறவும்,
☄அழகாய்ப் பிறந்து அல்லலுக்கு ஆளானவர்களின் கர்ம வாதனைகள் தணிந்து, வேதனைகள் தீரவும்
☄விபத்து, நோய்கள் போன்ற பலவிதமான காரணங்களால் அழகு வதனம் மாறுபட்டவர்கள் “விதிப் பூர்வமான” காரணங்களை அறிந்து, தெளிந்த நிலையில் மனத் துயரங்கள், வருத்தங்கள் தீரவும்,
☄தம் பெண் பிள்ளைகளின் திருமணம் மற்றும் திருமண வாழ்வு பற்றிய கவலைகளைப் பெருக்கிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் மனக்கஷ்டங்கள் தீரவும்,

லாவண்ய கௌரீ விரதம் உதவும்.

813 total views, 1 views today

Comments

  1. Jeyashree on May 14, 2016 at 9:14 pm said:

    Please publish eachankudi photos. Eagerly waiting

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai