Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

மாளய பட்ச இருவாரக்காலம் 17.9.2016 முதல் 30.9.2016 வரை-திருவீழிமிழலை சிறப்புகள்

Home » Temples » மாளய பட்ச இருவாரக்காலம் 17.9.2016 முதல் 30.9.2016 வரை-திருவீழிமிழலை சிறப்புகள்

 பிறவித் தளையை போக்க வல்ல மாளயபட்ச வழிபாடு☄
மாளய பட்ச இருவாரக்காலம் 17.9.2016 முதல் 30.9.2016 வரை

துன்முகி ஆண்டு மாளய பட்ச தலம்:- திருவீழிமிழலை சிறப்புகள்  1⃣ 
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்

✡திருவீழிமிழலையில் ஸ்ரீ கல்யாண சுந்தரர் – ஸ்ரீ காத்யாயனி தெய்வத் திருமண நிகழ்வில்
ஸ்ரீ காத்யாயன ரிஷியின் சந்தேகத்தினை தீர்க்கும் வகையில்
பெருமிழலைக் குறும்ப நாயனார் விளாம்பழ யோகத்தில் தினமும் ஈஸ்வரனுக்குப் படைத்து கயிலாயத்தை அடைந்து வந்த விளாம்பழங்களை
கயிலாயத்தில் இருந்தே உருட்டி விட்டு திருவீழிமிழலையில் தோன்றச் செய்த அனுபூதி நிகழ்ந்த தலம்

✡ பக்திச்-சின்ன முத்திரையாய்ப் பொலியும் விளாம்பழத்தை இன்றும் திருவீழிமிழலை தலத்தில் கல்யாண சுந்தர மூர்த்தியின் திருவடிகளில் தரிசிக்கலாம்

✡மஹாமகத் தீர்த்தக் கரையில் விளாம்பழத்தை வைத்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் தர்ப்பணம் அளித்து அன்னதானம் செய்து வந்திடில் மூதாதையர்களுக்குக் கயிலாய நற்கதி மார்கம் கனியும்


தர்ப்பண மஹிமை 4⃣ 
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்

✡பித்ரு தேவ மூர்த்திகளில் வசு பித்ரு மூர்த்தி, ருத்ர பித்ரு மூர்த்தி, ஆதித்ய பித்ரு மூர்த்தி ஆகிய மிக முக்கியமான மூன்று பித்ரு நாயக மூர்த்திகளின் முதல் வழிபாட்டு மூர்த்திகளாக விளங்குகின்றவர்களே மாளாபுர மும்மூர்த்தி விநாயக மூர்த்திகளாவர்.

✡பல இல்லறப் பெண்மணிகளும், தங்கள் வீட்டுக்காரர்கள் அமாவாசைத் தர்ப்பணத்தின் மீது நம்பிக்கை கொள்ளாது அசிரத்தையாக இருப்பது கண்டு மிகவும் வருத்தமடைகின்றனர்.

✡மேலும்,  தந்தை இறந்திட, தாயும் தன் பிள்ளைகள் கணவருக்குச் சரியாக தர்ப்பண, திவச நற்காரியங்களைச் செய்திடவில்லையே; இது சந்ததிகளைப் பாதிக்குமே என்று வருந்தி உள்ளூர அழுது ஏங்குவது உண்டு.

✡எவருடைய வீட்டில் தர்ப்பண, திவச வழிபாடுகள் முறையாக நடக்கவில்லையோ, இதனால் ஏற்படுகின்ற சந்ததி நஷ்டங்கள், விபத்துகள் போன்ற பித்ரு சாப விளைவுகளிலிருந்து தங்களையும் சந்ததிகளையும் தற்காத்துக் கொண்டிடத்
தட்சிணாயனப் புண்ய காலம்,
சந்திர கிரகணம்
அமாவாசை நாட்களில்

✡ மாளாபுரம் மும்மூர்த்தி விநாயகர் சந்நதி வளாகத்தில் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றி
வலம்புரிச் சங்கினால் பால், தேன், கரும்புச் சாறு இவற்றால் அபிஷேகம் செய்து
குறைந்தது 300 நரமணிக் கொழுக்கட்டைகளைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால்
பித்ரு காரியங்கள் நன்முறையில் தொடர்ந்திட விநாயகர் அருள்புரிவார்.

✡பித்ரு சாப தோஷ நிவர்த்தித் தலமாக மாளாபுரம் மும்மூர்த்தி விநாயக சந்நிதி விளங்குகிறது.

✡ கும்பகோணம் – வலங்கைமான் சாலையில் – திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் மாளாபுரம் உள்ளது

♻கூடுதல் அறவுரைகள் ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜூலை 2001ல்

☄ பித்ரு முக்தித் தலங்களில் ஒரு மண்டல தர்ப்பண வழிபாடுகள்☄

தர்ப்பண மஹிமை 5⃣ 
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்

✡ சுவாசக் குழல், இருதய நோய்கள், உணவுக் குழாய், சிறுநீரகக் குழாய்கள், மலக்குடல் நோய்கள் போன்றவற்றால் அவதியுறுவோர்
மூங்கில் தம்ளர்களில்
கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்தங்களோடு
வில்வம், துளசி சேர்த்து
48 தினங்களுக்கு தினந்தோறும் தர்ப்பணம் அளிப்பது மிகச் சிறந்த பலாபலன்களை அளிக்கும்

✡இதற்கான பித்ரு முக்தித் தலங்களில் குறிப்பிடத்தக்கவை

நதி தீரங்கள்
ஆலயத் தீர்த்தங்கள்
ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடிக்கரை, போன்ற புனித கடல் தீர்த்தக் கரைகள்
திருமகேந்திரப்பள்ளி (சிதம்பரம் அருகே)
பரிதிநியமம் (பட்டுக்கோட்டை அருகே)
திருவுசாதானம்
இடும்பாவனம்
கும்பகோணம் சக்கரப்படித்துறை
திருவிடைமருதூர் தீர்த்தம்
திருவள்ளூர் தீர்த்தம்
கயா (பீஹார்)
திரிவேணி சங்கமம் (அலகாபாத் – பிரயாகை)
பிரபாசப் பட்டினம் எனும் சோமேஸ்வரம் (குஜராத்)
தென்னிந்திய கயா எனும் பூவாளூர்

♻கூடுதல் அறவுரைகள் ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜூலை 2001ல்

☄மூன்று நதிகள் சங்கமிக்கும் பிதுர்முக்தித் தலம் திருவீழிமிழலை☄

துன்முகி ஆண்டு மாளய பட்ச தலம்:- திருவீழிமிழலை சிறப்புகள்  2⃣ 
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்

✡அரசலாறு, பாலாறு, ருத்ரகங்கை மூன்றும் புராணப் பூர்வமாய் இணையும் திரிவேணி சங்கமப் பிதுர்முக்தித் தலம்

( I ) குடந்தைக் காவிரி நதியிடம் மஹாவிஷ்ணு சொல்லி, திருவீழிமிழலைக்கு வந்த அரிசொல் ஆறு எனும் அரசலாறு

( II ) வரவள பீஜங்கள் அண்டம், பிண்டம்  இரு ஞானவாஹினிகளாய், முட்டை வடிவில் வீழித்தலத்தில் ஆற்றில் ஒளிப்ரகாசத்துடன் மிதந்து, காட்சி தந்து மறைந்த முட்டையாறு எனும் பாலாறு பாயும் திருவீழிமிழலை

(III ) சூக்குமமான பர்யந்தமாய் *ருத்ரகங்கை நதி இணையும் திருவீழிமிழலை.

✡ஸ்ரீவீழிநாதேஸ்வரர் ஆலயத்தின் முன்னே, தோப்பு அருகே திரிவேணி நதிச் சங்கம நீராடல் கட்டம் உள்ளது.

✡அருகில் உள்ள விளாகம் கிராமத்தில் இருந்தும் நதி சங்கமம் நன்கு தரிசனமாகும்.

ஓஃம்

☄ ஸ்ரீகார்த்யாயனியின் சுவாச யோக சக்தியே இருவாட்சி மலர்☄

துன்முகி ஆண்டு மாளய பட்ச தலம்:- திருவீழிமிழலை சிறப்புகள்  3⃣ 
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்

✡அம்பிகை கார்த்யாயனியாய் திருவீழிமிழலைத் தலத்தில் சாதாரண மானுடச் சிறுமியாய் பூமிக்கு வந்து கார்த்யாயன மாமுனிவரால் வளர்க்கப் பெற்றாள்.

✡மஹரிஷி போதித்தபடி, சுவாசம், மற்றும் உணவினை நித்திய யோகமாய்,  நித்திய ஆத்ம பூஜையாய்க் கொண்டு(ம்) வீழிச் சிவபூமியில் வளர்ந்தனள்.

✡இந்நிலையில் உலகிற்கு அளிக்கப் பெற்றதே காயத்ரீ தபஸ் எனும் விரல் முத்திரையோகப் பயிற்சிகள்.

✡இவ்வரிய வழிபாட்டின் கனிவாய், அம்பிகையின் சுவாச யோக சக்தியே இருவாட்சி மலராய்த் தோன்றியது.

✡இருவாட்சி மலரால் அம்பிகையை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், சிறப்பான யோக சக்தி கிட்டும். சுவாச நோய் நிவர்த்திக்கும் உதவும்.

✡இறைவனுக்கு சிகப்பு வண்ண இருவாட்சிப் பூவும்,
இறைவிக்கு வெண்மை நிற இருவாட்சி மலரும் உகந்தவை.


☄ மாளய பட்சத் தர்ப்பணப் பூஜை ஒரு மகத்தான சர்வதோஷ நிவாரணி☄

தர்ப்பண மஹிமை 6⃣ 
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்

✡முற்காலத்தில் நீத்தார் எனும் மூதாதையர்களுக்கு, தினமுமே தர்ப்பணம் அளித்து வந்த நித்தியத் தர்ப்பண முறையானது, காலப்போக்கில் மங்கி

✡ஷண்ணாவது என்பதாய் வருடத்தில் 96 நாட்களில் தர்ப்பணம் இடுதல் என்று குறுகி

✡தற்போதைய கலியில், மாதம் ஒரு முறை அமாவாசை அன்று மட்டுமே தர்ப்பணம் என்று தேய்ந்து போயிற்று.

✡இதனால்தான், கலியுலகில், பெரும்பாலான குடும்பங்களில் பிதுர் தோஷங்கள் பெரும் புதராய் மண்டிக் கிடக்கின்றன.
இதனால் நோய்ப் பிணிகள், சந்ததி இன்மை, ஆண் அல்லது பெண் வாரிசு இல்லாமை, பணக் கஷ்டம், இல்லறத்தில் சண்டை, சச்சரவுகள், உத்யோகம் / தொழிலில் தீராத துன்பங்கள், குழப்பங்கள், மன அமைதி இல்லாமை, குடும்பத்தார் இடையே பிணக்குகள் போன்றவை மிகுந்து வருகின்றன.

✡ மாளய பட்சத் தர்ப்பணப் பூசனை என்பது சர்வ தோஷ நிவாரணீயாய்,
இவை அனைத்தையும் களைந்து
இல்லறங்களுக்கும், சமுதாயத்துக்கும் சாந்தத்தை வர்ஷிக்க வல்லதாகும்.

✡புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்திலாவது தினமும் ஒவ்வொரு குடும்பத்திலும் தர்ப்பண வழிபாடுகளை ஆற்றி வரவும்.

✡இதுவரை வாழ்வில் விட்டுப்போன அமாவாசைத் தர்ப்பணங்கள், ஷண்ணாவதி சிராத்த நாட்களில் ஆற்ற வேண்டிய தர்ப்பண, திதி, திவச பூஜைகளுக்கு புரட்டாசி மாத மாளய பட்சக் காலமானது கணிசமான பரிகாரத்தை நல்க வல்லதாகும்.


மனிதர்கள் பலரும் தான, தர்மம் செய்வதாக நினைத்துச் செய்து கொண்டிருக்கிற பலவுமே கடமைப் பணிகளே!

☄ சீதாலக்ஷ்மியான சீதாபிராட்டியே,  தர்ப்பணத்தையும், திவசத்தையும் பெண்களும் ஆற்றிடலாம் என்பதற்கு  வழிகாட்டித் தந்தவள்☄

தர்ப்பண மஹிமை 7⃣ 
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்

✡ இராமருடைய வனவாசத்திலே, ஒரு முறை தசரதருக்கு ஆற்ற வேண்டிய தர்ப்பண, திவச பூஜைகளிலே பூஜைப் பொருட்களை எடுத்து வரச் சென்ற ஸ்ரீராமர் வருவதற்குத் தாமதமானமையால்

✡”திவச / தர்ப்பண நேரம் கடந்து விடக் கூடாதே!” என்பதற்காக, சீதாதேவியே தசரதருக்கு வேண்டிய திவசப் பூஜைகளை ஆற்றிட விழைந்து, அப்போது ஆங்கே ஸ்ரீராமர், லட்மணரும் இருவருமே அங்கு பிரசன்னமாகி இருப்பதாக பாவனை கொண்டு வெள்ளை எள்மணிகளைக் கொண்டு திவசத்தை நடத்தி வைத்தாள்.

✡பூஜைப் பொருட்களுடன் திரும்பி வந்த ராமரும், லட்சுமணரும் இதைக் கண்டு வியந்தனர்

✡சாதாரண மனித வடிவிலே அவதாரத்தைக் கொண்டிருந்தமையால், சாதாரண மனிதர் போலவே தம்மை இருத்திக் கொண்டு
“சீதை நடத்திய பிருப் பூஜைகளைத் தன் தந்தை ஏற்றிருப்பாரா!” என்று சற்றே யோசித்து,
திவச பூஜைகளை மீண்டும் நடத்துவதற்கு முனைந்த போது,

✡வானிலே தசரதர் தோன்றி, “ராமா, ஏற்கனவே தர்ப்பண, திவசப் பூஜைகளை சீதாலக்ஷ்மி எமக்கு அளித்தாகி விட்டது, அவை என்னை வந்து அடைந்து விட்டன. நான் ஆனந்தமாய் இருக்கின்றேன்!” என்று சந்தோஷித்துக் கூறினார்.

✡இந்தப் புராண வைபவம் நிகழ்ந்த தலங்களுள் ஒன்றே உத்திரகோசமங்கை பெருமாள் தலமாகும்.

✡வருடத்தில் ஒரு முறையாவது வளர்பிறை மற்றும் தேய்பிறை துவாதசித் திதியிலும், வ்யதீபாத யோக நாளிலும், வைதிருதி யோக நாளிலும் திலதைப்புரியிலும், உத்திரகோசமங்கைப் பெருமாள் தலத்திலும் தர்ப்பணப் பூஜைகளையும், திவசங்களையும் ஆற்றுவது சிறப்புடையது

☄ பெண்கள் தர்ப்பணம் ஆற்றிட வேண்டிய  முறைகள்☄

தர்ப்பண மஹிமை 8⃣ 
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்

வெற்றிலையில் ஆண் வெற்றிலை (நரம்புகள் நிறைந்தும்), பெண் வெற்றிலை (நரம்புகள் குறைந்தும்) என இரு வகைகள் உண்டு

ஓர் ஆண் வெற்றிலையை நன்கு சுத்தப்படுத்தி அதில் நன்கு அரைத்த மஞ்சளைப் பிடித்து வைத்து கூம்பு போல் அமைக்க வேண்டும்.

யாருக்குத் தர்ப்பணமோ அவர்களுடைய பெயரை தியானித்து, மஞ்சள் கூம்பில் பித்ரு ரூபத்தில் எழுந்தருளும்படி வேண்ட வேண்டும்.

பிறகு இந்த மஞ்சள் பித்ரு பிம்பத்திற்கு முன், ஆறு தர்ப்பைகளைக் கொண்டு தர்ப்பை சட்டம் அமைத்து
வெள்ளை எள் கலந்த நீரை வார்த்துத் தர்ப்பணமிட வேண்டும்.

பெண்கள் இம்முறையில் தர்ப்பணம் அளித்தால், தர்ப்பணத்தின் பலன்கள் சிறந்த ஆசிர்வாதங்களாக மாறி, பல வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்கின்றன.

☄ தெய்வத் திருமணப் பந்தக்கால்☄

துன்முகி ஆண்டு மாளய பட்ச தலம்:- திருவீழிமிழலை சிறப்புகள்  4⃣ 
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்

✡திருவீழிமிழலைச் சிவாலயத்தில் பார்வதி கல்யாணத்திற்கான பந்தக்கால் ஒன்று மக்கள் தரிசனத்திற்காகப் பன்னெடுங்காலம் இருந்து வருகின்றது.

✡இதன் தரிசனமே எண்ணற்ற திருமண தோஷங்களை நிவர்த்தி செய்திடும்.
பிரிந்திருக்கும் தம்பதியரையும் ஒரு சேர வைக்கும்

✡ சித்திரை மாதம் மக நட்சத்திர நாளில் திருவீழிமிழலையில்  மாப்பிள்ளைச் சாமியாய், கல்யாண சுந்தரராய் சிவபெருமானே தோன்றி, காத்யாயனியாய் தோன்றிய உமையவளை மணக்கும் தெய்வத் திருமண வைபவம் நிகழ்கின்றது.

387 total views, 2 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai