Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

நீரிழிவு நோய்

Home » Healing » நீரிழிவு நோய்

 

நீரிழிவு நோய்.   கணையம்  என்கிற pancreas என்பது ஒரு கிரேக்க வார்த்தை.pan என்றால் ‘எல்லாமும்’  creas என்றால் ‘சதை’ என்று அர்த்தம்.அப்படீன்னா கணையம் என்பது மொத்தமும் சதையாலான உறுப்பு எனப் பொருள்.கணையம் சீரணப்பணிக்கான நீரினணயும்,ஆல்ஃபா செல்கள் மூலம் அதிகமான  க்ளைக்கோஜன்  குளுக்கோஸ் மாற்றத்துக்கும்,அதே நேரத்தில் குளுக்கோஸை ஆற்றலாக மாற்றும் இன்சுலிணையும் சுரக்கும் அற்புத உறுப்பு.

இது நாளமுள்ள   ,நாளமில்லா சுரப்பி.  புரதச் செரிமானத்திற்கு வேணும்கிற  ட்ரிப்சின் ,கைமோ ட்ரிப்சின்,கார்பாக்சி பெப்டிடேஸ் இப்படி அறிவியலாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.  எதார்த்தமாகப் (அக்குப்பங்சர்)பார்த்தால்,     உடல் இயங்க காற்றை இயற்கையாகப் பெற்றுக்கொள்கிறது, நீரானது இயற்கையான ஒன்று. அப்ப உணவு ஒன்று மட்டும் தான் நம்முடைய தேர்வாக இருக்கிறது. உணவுத் தேர்வும் உண்ணும் முறையும் தான் எல்லா நோய்களுக்கும் குறிப்பாக சர்க்கரை நோய்க்கு  அடிப்படைக் காரணம் அக்குப்பங்சர் கூறுகின்ற ஒழுங்கற்ற செரிமானத்தால் கிடைக்கின்ற தரமற்ற குளுக்கோஸ் உடல் நிராகரிக்கும் என்பதுதான் சரி. செரிமாணம் நடைபெறும்  ஜீரண மண்டலத்திலிருக்கும்  எல்லா உறுப்புகளும்  ST,SP,SI,LI,LIV,GB தங்களின் ஜீரணப் பணியை செம்மையாக செய்தால் தான் கணையம் தன் பணியை முறையாகச் செய்யும்.

வாயில் நன்றாக அரைக்கப் படாத உணவு கண்டிப்பாக தரமான குளுக்கோஸாக இருக்காது.அதனால்தான் “நொறுங்கத்தின்றால் நூறு வயது’ முன்னோர் சொன்னார்கள். கெட்ட குளுக்கோஸை உடல் நிராகரிக்கும்.இப்போது சிறுநீரில் சர்க்கரை வெளியாகும். சர்க்கரை நோயால் உண்டாகும் அறிகுறிகளான உடல் எரிச்சல்,பாத எரிச்சல்,உடற்சூடு அதிகரித்தல்,வாயுக்கோளாறு,பார்வைக் கோளாறு பக்கவாதம் இன்னபிற  பிரச்சினைகளுக்கு என்ன காரணம்?இதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் தருகிறேன்.குளுக்கோஸ்தான் நமது உடலுறுப்புகள்,திசுக்கள்,அணுக்கள் இதனுடைய இயக்கத்திற்கு எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது. என்பதை நாமறிந்த ஒன்று.

இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.ஜீரணப்பணி செய்யும் உறுப்புகளில் எந்த உறுப்பின் பணியில் குறைபாடு ஏற்படுகிறதோ அந்த உறுப்பிலிருந்து வெளிப்படும் குளுக்கோஸ் தரமற்றதாக உடலால் நிராகரிக்கப்படும் குளுக்கோஸாக இருக்கும். உதாரணத்திற்கு ஜீரணத்தில் கல்லீரல் இயக்கம் குறைவுபட்டு  அதிலிருந்து வெளிப்படும் குளுக்கோஸ் நிராகரிக்கப்படும் போது கோபம் எனகிற உணர்வும் உடலில் எரிச்சல் என்கிற அறிகுறியும் உருவாகும்.

இப்படியே நெருப்பு மூலகமான சிறுகுடல் இயக்கம் குறைவுபட்டால்  உடற்சூடு அதிகரிக்கும்.இதெல்லாவற்றிக்கும் காரணம் அந்தந்த உறுப்புகளின் இயக்கக் குறைபாடே.  வயிறு  ,மண்ணீரல,Liv,GB,SI,LI இப்படி எந்தஊ உறுப்பு பாதிக்கப்பட்டிருந்தாலும் மண்ணீரல் இயக்கம் குறைவுபடும்.

மண்ணீரல் தான் மற்ற உறுப்புகளின் உறுதியான இயக்கத்திற்கு மூலகாரணம் மண்ணீரல்தானாகக் கெட்டிருந்தாலும்,மற்ற உறுப்புகளால் கெட்டிருந்தாலும், கணையம் தன் இயக்கத்தில்  பலவீனமடையும்.இங்கதான் நோய் ஆரம்பம். அப்ப மண்ணீரலுக்கும் கணையத்துக்கும் என்ன தொடர்பு? என நீங்கள் கேட்பது புரிகிறது.நில மூலக உறுப்பு அதன் திசுக்களைப் பாதிக்கும்.நிலத்தின் திசுக்கள் தசை. கணையம் என்பதும் தசையாலான உறுப்பு என்பதை முன்னரே கண்டோம்.

நில மூலகமான மண்ணீரல்  கெடுவதால்தான் உடல்  தசைகள் கெட்டு மெலிந்து போகிறார்கள் நீரிழிவுக்காரர்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் ஜீரண உறுப்புகளில் எந்த உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டாலும் மண்ணீரலின் இயக்கம்  பாதிக்கப்படுவதால் அதோடு தொடர்புடைய கணையம் தன் பணியைச் சரியாகச் செய்யாது. இதற்கு நீரிழிவுக்கு மண்ணீரல் சக்தியோட்டப் பாதையில் சிகிச்சை கண்டிப்பாகப் பலனளிக்கும்.   உஙகள் அன்பில் ஹீலரகள்சங்கமம்  .

454 total views, 3 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai