Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

கோமாதா – கோபூஜை

Home » Happiness » கோமாதா – கோபூஜை

Komatha

கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும். குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர்

*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.

*பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

*பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

*பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

*பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

*`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.

*பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன

ௐ கோ சேவை – ரமண மகரிஷி :-

சேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது கோ-சேவை. கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விடவே கூடாது. தயங்கவும் கூடாது. பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா?

ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார். வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி. அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது. எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை. ஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது. எரிச்சலிலும் வலியிலும் துடித்தார்.

ரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல ரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார்.

பகவான் ரமணர் அவரை பார்த்து, “நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து. உன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய். ஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய். பசுக்களை குளிப்பாட்டு. சாணத்தை அள்ளிப்போடு. கோ-சாலையை சுத்தம் செய்!” என்றார்.

செல்வந்தரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு, ஆஸ்ரமத்தின் கோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார். சரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது அவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது.

பசுவின் சாணம், கோமியம் ஆகியவை நம் மேல்படுவது, பசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும் சஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன? தீராத தோல் நோய் உள்ளவர்கள், உங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு, ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள். கோ-சேவையின் மகத்துவம் புரியும்.

அனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு. ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே. ஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும் தொழுவத்தில் இருந்தாலும், பார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம். பிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா?

* காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல், கீழ்கண்ட மந்திரத்தை கூறி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால் புத்திரப் பேறு கிடைக்காத பெண்ணுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.

சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.

* பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார். கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும். கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால் சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான். கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.

பசு காயத்ரீ மந்திரம்:-

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

* 1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் அவன் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றிவிடுவான்.

கோமாதாவின் உடற்பகுதியும் அங்கே அருளும் தெய்வங்களும்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். அவை எந்த இடத்தில் அமைந்திருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

✩ முகம் மத்தியில் – சிவன்

✩ நெற்றி – சிவசக்தி

✩ வலதுகொம்பு – கங்கை

✩ இடதுகொம்பு – யமுனை

✩ வலக் கண் – சூரியன்

✩ இடக் கண் – சந்திரன்

✩ மூக்கு வலப்புறம் – முருகன்

✩ மூக்கு இடப்புறம் – கணேஷர்

✩ கழுத்து மேல்புறம் – ராகு

✩ கழுத்து கீழ்புறம் – கேது

✩ கொண்டைப்பகுதி – பிரம்மா

✩ இருகாதுகளீன் நடுவில் – அசுவினி தேவர்

✩ வாய் – சர்ப்பசுரர்கள்

✩ பற்கள் – வாயுதேவன்

✩ நாக்கு – வருணதேவன்

✩ நெஞ்சு மத்தியபாகம் – கலைமகள்

✩ மணித்தலம் – யமன்

✩ உதடு – உதயாத்தமன சந்தி தேவதைகள்

✩ மார்பு – சாத்தியதேவர்கள்

✩ முன்கால்கள் மேல்புறம் – சரஸ்வதி, விஷ்ணு

✩ முன்வலக்கால் – பைரவர்

✩ முன் இடக்கால் – ஹனுமார்

✩ பின்னங்கால்கள் – ப்ராசரர், விஷ்வாமித்திரர்

✩ பின்னகால் மேல்பகுதி – நாரதர், வசிஷ்டர்

✩ முதுகுப்புறம் – பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி

✩ வயிற்றுப்பகுதி – ஜனககுமாரர்கள், பூமாதேவி

✩ வால் மேல் பகுதி – நாகராஜர்

✩ வால் கீழ்ப்பகுதி – ஸ்ரீமானார்

✩ முன்வலக்குளம்பு – விந்தியமலை

✩ முன்இடக்குளம்பு – இமயமலை

✩ பின் வலக்குளம்பு – மந்திரமலை

✩ பின் இடக்குளம்பு – த்ரோணமலை

✩ பால் மடி – ஏழு சமுத்திரங்கள்

✩ குதம் – இலட்சுமி.

799 total views, 2 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai