Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

குண்டலினி திருக்கோயில்- திருப்பெருந்துறை

Home » Temples » குண்டலினி திருக்கோயில்- திருப்பெருந்துறை

மூலாதாரத்தின் மூலமாக ஆறு ஆதாரங்களை அடைந்து மேன்மை பெறும் அரிய நிலையை அருமையான திருக்கோயிலாக அமைத்து தந்தவர் மாணிக்கவாசகப்பெருமான்.

பாண்டியனின் முதலமைச்சராக இருந்து இறைவனின் பேரருள் பெற்று குருந்த மரத்தடியில் குருவை கண்டு குருவின் திருவருள் நோக்கால் நமக்கு அமைத்து தந்த திருப்பெருந்துறை கோயிலே குண்டலினி திருக்கோயில் இப்படிப்பட்ட குண்டலினி திருக்கோயிலாய் அமைக்கப்பட்ட திருப்பெருந்துறை கோயிலின் பெருமைகளை மக்கள் இன்னும் அறியாதவராகவே உள்ளனர்.

இத்திருக்கோயில் நமது உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களை அமைப்பாக கொண்டது. உலகிலே வேறு எங்கும் இத்தகைய அமைப்பு கொண்ட கோயில் கிடையாது. இங்கு இறைவனும் இறைவியும் அருவுருவமாக இருக்கின்றனர். உடலமைப்பே திருக்கோயில் அமைப்பு என்னும் உயர் நெறியில் உண்மைநெறியில் கண்ட மீமிசை உச்ச அமைப்பே இக்கோயில்.

இக்கோயில் சிற்ப திறமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

இணையில்லாத நமது உடலமைப்பின் உண்மைகளை எல்லாம் அறியாதவர் கூட இக்கோயிலுக்கு சென்றால் ஏற்றம் பெறுவார். சிவன் இங்கு ஆவுடையாராக மட்டும் உள்ளவராக கருவறையில் இருக்கின்றார். இந்த பீடத்தில் அறிவொளி வடிவாக நமது ஆத்மனாதனை தியானித்து வழிபடவேண்டும்.

எல்லா திருக்கோயில்களிலும் காணப்படும் கொடிமரம், நந்தி, பலிபீடம் எதுவும் இங்கு இல்லை. ஏனெனில் இங்கு வழிபடுவோரே கொடிமரமாக நிற்ப்பதால் இங்கு கொடிமரம் கிடையாது. திருக்கோயில் படிநிலை வளர்ச்சியில் முழுநிலை பெற்ற முதன்மை திருக்கோயில் இக்கோயில் ஆகும்.

திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோரின் அகப்பார்வையே இங்கு நந்தியாகும், நம் உடலில் முதுகு தண்டில் சுழுமுனை வழியாக மேல் நோக்கி புருவமத்தி வரை செல்வதே கொடிமரம். நம் அடிவயிற்று பகுதியே பலிபீடம்.

அம்பிகைக்கு நேரே சாளரம் உள்ளது அதனால் பக்க வாயில் வழியே தான் செல்லவேண்டும், உள்ளே கருவறையில் அன்னையின் உருவத்திற்கு பதில் தாமரை தளம் மட்டுமே உண்டு. மேலே திருச்சக்கரம் உள்ளது அன்னை தவக்கோலத்தில் மறைவாக உள்ளார் யோகாம்பிகை எனும் நாமத்துடன்.

எப்போதும் இக்கோயிலில் சங்கு, மணி ஓசை தவிர பெற இசைக்கருவிகள் இசைக்கப்படுவதில்லை.

இறைவனுக்கு சோற்றை சுடசுட குவித்து படைக்கிறார்கள், அதன் ஆவி தான் இறைவனுக்கு திருப்படையலாகும். எல்லா விழாக்களும் மாணிக்கவாசகருக்கே, அவர் இங்கு சிவமாக விளங்குகிறார். மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி பாடிய இடம் இவ்வூரே ஆகும். ஆகையால் விடிகாலை இத்தலத்தில் வழிபாடு செய்தல் நலம்.

இக்கோயிலுக்கு யோகவனம், குருந்த வனம், ஆதிகைலாயம், அறிவுரைதலம், வேதபுரம், ஞானபுரம், யோகபீடபுரம் சிவபுரம் எனும் பெயர்களும் உண்டு. இறைவனும் இறைவியும் தென்றல் காற்றை உவந்த வண்ணம் தெற்கு நோக்கி வீற்றிருக்கின்றனர்.

அறியாதவர்க்கு அறியக்காட்டும் முகமே தென்முகம். உடல் கொண்டு உயர்வுநிலை பெறும் உயரிய முறையை மக்களுக்கு உணர்த்தவே இருவரும் தென்முகம் கொண்டுள்ளனர். தென்முககடவுள், நடராசர் , தவிர இறைவனும் இறைவியும் தென்முகம் கொண்டுள்ள கோயில் வேறெங்கும் கிடையாது.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்கள் மூலம் செலுத்தி உச்சியில் தாமரை தளத்தில் உள்ள இறைவனுடன் அச்சக்தியை கொண்டு இணைத்து அமுதம் பெற்று பேரின்பம் அடையவேண்டும் இதற்க்கு இன்றியாமையாதவை இரண்டு . ஒன்று மனம் அடங்கி ஒருமைபடுத்துதல், இரண்டு இறைவனை சிக்கென பிடித்தல் இதை மாணிக்கவாசகரே செய்து காட்டி ஏற்றம் பெற்றவர். இதை உணர்த்தவே மனம் எனும் குரங்கையும் சிக்கென படிக்கும் உடும்பையும் உள்ளத்தில் கொண்டு அதன் இயல்புகளை நாம் பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே மேல் உள்ள கொடுங்கையில் இவற்றினை அமைத்துள்ளனர்.

நிலசூடு எப்படி பயிர்களையும் புல்பூண்டுகளையும் முளைக்கவிடாதோ அதுபோல் மனசூடும், அதனால் வரும் உடல்சூடும் மனதில் நல்ல எண்ணங்களை முளைக்கவிடாது. இதனை உணர்த்தவே அக்னி வீரபத்திரரும், அகோரவீரபத்திரரும் பக்கத்திற்கு ஒருவராய் அமைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பெருந்துறை இறைவனை நெடுந்தொலைவில் இருந்தே நாம் காண முடியும், இக்கோயிலில் ஒன்றன்பின் ஒன்றாக ஆறு சக்கரங்கள் போல் ஆறு மண்டபங்கள் உள்ளன. ஆத்மனாதரை கண்டு களிக்க குறுக்கே திரைகள் உள்ளது போல் மனதில் உள்ள இறைவனை காண குறுக்கே ஆசை மாயை எனும் திரைகள் உள்ளன.

நாம் முதலில் புகுவது மூலாதார மண்டபம் இம்மண்டபங்கள் ஒவ்வொன்றும் வீடு போன்றது, ஆகவே ஒவ்வொரு மண்டபமும் கொடுங்கைகளால் அணி செய்துள்ளனர். மூலாதார மண்டபம் மேல் தளத்தில் தத்துவங்கள், பஞ்ச பூதங்கள் ஆறு அத்துவாக்கள் முதலானவை பற்றிய செய்திகள் ஓவியமாக்கப்பட்டுள்ளன. இந்த தத்துவங்கள் குண்டலினி சக்திக்கு உரியவை. இந்த தத்துவங்களை முப்பது ஆறுஆகவும், அதனை முதலில் மூன்றாக பிரிப்பர். ஆத்ம தத்துவம் எனும் உயிர்த்தத்துவம் நம் உடலோடு முடியும்.வித்யா தத்துவம் எனும் அறிவு தத்துவம் ஒலியுடன் முடியும் இறைதத்துவம் சிவனுடன் நிறைவடையும். இம்மூன்று தத்துவங்களும்இணையும் இடம் பிடரிக்கண் எனப்படும்.

இரண்டாவதாக சுவாதிட்டான மண்டபம் இம்மண்டபத்தில் சிவபெருமானை சிக்கென பிடித்து சிவமாகிய மாணிக்கவாசகர் வீற்றிருக்கிறார்.

மூன்று நான்காவதான மணிபூரகம், அனாகதம் ஆகிய மண்டபங்கள் உள்ளன். அதன் பின் விசுத்தி, ஆஞ்ஞை அனும ஐந்து ஆறாவது மண்டபங்கள் உள்ளன்.

அடுத்து ஆறு ஆதாரங்களுக்கு மேற்ப்பட்ட இடமாகிய ஆயிர இதழ் தாமரை தளமாகிய கோயிலின் கருவறை உள்ளது. விசுத்தி என்பது கழுத்தில் உள்ள ஆதார இடமாகும் இந்த வழிதான் உணவு செல்கிறது, அதுபோல் இந்த விசுத்தி மண்டபத்தில் தான் சுடசுட ஆவி பறக்கும் சோறு படைக்கப்படுகிறது இந்த ஆவியே இறைவனுக்கு இடும் படையலாகும், ஆவி என்னும் மக்களின் உயிரும் இறைவனுடன் இணைவதற்காக படைக்கப்பட்டது என்பதையே இது உணர்த்துகிறது. அரிசி அவித்து பக்குவப்படுத்தப்பட்டு உடலுடன் இணைவது போல நம் மனத்தால் பக்குவப்படுத்தப்பட்டு இறைவனுடன் இணையவேண்டும். அவ்வாறு இணைய செய்யும் முறையே குண்டலினி முறையாகும்.

இங்கு இறைவியை பலகணியின் வழியே தான் காண வேண்டும் இதில் நாற்பது துளைகள் உள்ளன ஒவ்வொரு துளையும் முக்கோண அமைப்புடையது. நடுவில் உள்ள மூன்று முக்கோணங்கள் உள் அமைப்பாக உள்ளது. அம்மை பீடத்தில் உருவாக இல்லாமல் மேருமலை போல் தாமரை அடுக்காக உள்ளார்.

சங்கு ,மணி தவிர பிற இசைக்கருவிகள் ஒக்கப்படுவதில்லை காரணம் ,மூச்சு சங்கொலி என்றால் நெஞ்ச துடிப்பால் மூச்சு பயிற்ச்சியால் குண்டலி எழும்பி கண்டாமணி ஒலியாக உச்சியை அடையும். இவ்விரு ஒலியும் ஓங்காரத்துள் அடங்கியவை ஆகும். கருவறையுள் நிலவு, நெருப்பு சூரியன் ஆகிய முச்சுடர் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து கலைகளின் வடிவமாக கலாதீபம் உள்ளது. ஆத்மநாதர் பின்புறம் 27 நட்சத்திரங்களை குறிக்கும் இருபத்தியேழு விளக்குகள் உள்ளன. முன் மண்டபத்தில் 36 தத்துவங்களை விளக்கும் 36 விளக்குகள் உள்ளன.

உடம்பே கோயில், உயிரே இறைகூறு,மனமே இறையாற்றல். உயிர்ப்பு பயிற்சியால் உடலுள் இருக்கும் குண்டலினியை இறைவியின் துணையுடன் உச்சிக்கு சென்று சிவத்துடன் கலப்பதே பிறவியின் நோக்கம்.

நல்வினை தீவினை எனும் இருவினைகள் நமக்கு இடைவிடாது பிறவிகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆணவம், கர்மம், மாயை நீங்கி உயிர் சிவத்துடன் இணைய குண்டலினி உயிர்ப்பு இன்றியமையாதது.

காயமே கோயிலாக
கடிமணம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக
மனமணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலாம்
நிறைய நீர் அமைய ஆட்டி
பூசனை ஈசனார்க்கு
போற்றவி காட்டினோமே.

கோயில், திருமேனிகள், அபிஷேகம் ஆராதனை இவையெல்லாம் பக்தி மார்க்கத்தின் முதல் படிகள் மட்டுமே. மாணிக்கவாசகர் கூறியபடி அடுத்த படியாக தியானம், மனதில் இறைவனை ஏற்றி அருவுருவமாய் வழிபட ஆரம்பியுங்கள்

370 total views, 2 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai